மீனாட்சி அம்மன் கோயிலில் ஸ்கேனர் கருவிகள் பொருத்தம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மார் 2014 10:03
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பாதுகாப்பு கருதி ரூ.ஒரு கோடி மதிப்பில் ஐந்து ஸ்கேனர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளது. பாதுகாப்பு கருதி, 4 கோபுரங்களிலும் தலா எஸ்.ஐ., தலைமையில் 4 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கோயிலுக்கு வரும் பக்தர்களின் உடமைகளை சோதனை செய்ய வசதியாக, தலா ரூ.20 லட்சம் மதிப்பில் 5 ஸ்கேனர் கருவிகள் வாங்கப்பட்டன. அவற்றை அம்மன் சன்னதி உட்பட 4 கோபுரங்களின் நுழைவு வாயில்களில் பொருத்தப்பட்டன. அவற்றை, அறங்காவலர் கருமுத்து கண்ணன் நேற்று துவக்கி வைத்தார். இணை கமிஷனர் ஜெயராமன் உடனிருந்தார்.