பதிவு செய்த நாள்
15
மார்
2014
10:03
பழநி: பழநிமலைக்கோயில் ஒன்றாம் எண், வின்ச் பெட்டிகள் புதுப்பிக்கப்பட்டு, இன்று சோதனை ஓட்டத்திற்கு பின், பக்தர்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்படவுள்ளது. பழநிக்கு வரும் பக்தர்கள் மலைக்கோயிலுக்கு எளிதாக 8 நிமிடத்தில் செல்லும் வகையில், மூன்று "வின்ச் கள் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படுகிறது. இதில், முதலாம் எண் "வின்ச் பெட்டிகள் மராமத்து பணிக்காக, பிப்., 24 ல் நிறுத்தப்பட்டது. இரண்டு பெட்டிகளும், கரூரிலுள்ள தனியார் கோச் நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. நேற்று மாலை லாரி மூலம் பழநிக்கு கொண்டு வரப்பட்டு, கிரேன் இயந்திரத்தின் உதவியுடன், 4 டன் எடையுள்ள இரண்டு பெட்டிகளும் இறக்கப்பட்டது. பின், தண்டவாளத்தில் பொறுத்துபணி நடந்தது. இன்று ஒவ்வொரு பெட்டியிலும் தலா 1,200 கிலோ எடையுள்ள, மணல் மூடை, கற்கள் வைத்து, சோதனை ஓட்டம் நடக்கிறது. பக்தர்களின் பாதுகாப்பான பயணம் உறுதிசெய்யப்பட்டு, நாளை காலை முதல் இயக்கப்படவுள்ளது.