பதிவு செய்த நாள்
15
மார்
2014
12:03
கருங்கல் : புதுக்கடை அருகே உள்ள ஆனாம்பிகை நகர் சக்தி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாள்கள் திருவிழா நடைபெறுகிறது.
விழாவின் தொடக்கமாக கணபதிஹோமம்,புண்ணிய கலசபூஜை,தீபாராதனை,சமயவகுப்பு உள்ளிட்டவைகள் நடைபெறும். மாலை ஆன்மிக மாநாடு,அத்தாழ பூஜை , தினமும் நிர்மல்யதரிசனம்,உஷபூஜை,அன்னதானம்,பஜனை, கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
முக்கிய நிகழ்ச்சியாக 4 ஆம் திருநாள் கூட்டு பிரார்த்தனை 1008 திருவிளக்கு பூஜை நடைபெறும். 5 ஆம் நாள் அன்று தாலிப்பொலி ஊர்வலம் நடைபெறும். விழாவின் 9 ஆம் நாள் காலை பால்குட ஊர்வலம், பிற்பகலில் அம்மனுக்கு பால்,சந்தனம்,பன்னீர் ஆபிஷேகம் நடைபெறும். மாலையில் அம்மன் வீதி உலா வருதல், கும்பம் எடுத்துவருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும