பதிவு செய்த நாள்
18
மார்
2014
10:03
திருப்பாலைவனம்: திருப்பாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழாவில், திருக்கல்யாணம் மற்றும் தெப்ப உற்சவம் நடந்தது.பொன்னேரி அடுத்த, திருப்பாலைவனம் கிராமத்தில் உள்ள, லோகாம்பிகை உடனுறை திருப்பாலீஸ்வரர் கோவிலில், பங்குனி பெருவிழா நடந்து வருகிறது. நேற்று முன்தினம், காலை தீர்த்தவாரியும், மாலை, பெருமானுக்கு திருக்கல்யாண வைபவமும் சிறப்பாக நடந்தது. இரவு, 8:00 மணிக்கு கொடியிறக்கம் செய்யப்பட்டு, பஞ்ச மூர்த்திகளுடன் பெருமான், கோவில் திருக்குளத்தில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதற்காக பிரத்யோகமான மோட்டார் படகில் தெப்பம் தயார் செய்யப்பட்டிருந்தது. இரவு, 10:00 மணிக்கு, மாட வீதிகள் உலா பஞ்ச மூர்த்திகளின் திருவீதி உலாவும் நடந்தது. திருப்பாலை வனம், வஞ்சிவாக்கம், மெதூர், ஆவூர், வேம்பேடு உள்ளிட்ட, பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் திரளாக பங்கேற்று, பெருமானை வணங்கி சென்றனர்.