குஜிலியம்பாறை : டி.கூடலூர் ஊராட்சி பூசாரிபட்டியில், மாரியம்மன், பகவதியம்மன் கோயில்களில், சிறப்பு பூஜை நடந்தது. உலக நன்மைக்காகவும், மழை பெய்ய வேண்டியும் நடைபெற்ற பூஜையில், கூடலூர், பூசாரிபட்டி, திருமக்கம்பட்டி உள்ளிட்ட சுற்றுப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர். பெரிகாண்டியம்மன் தெய்வீக வழிபாட்டு மன்றத்தினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.