பதிவு செய்த நாள்
20
மார்
2014
12:03
காரிமங்கலம்: காரிமங்கலம் மந்தைவீதி ஸ்ரீ ராஜகணபதி கோவிலில் சங்கடஹரசதுர்த்தி வழிபாடு, இன்று நடக்கிறது. இதையொட்டி, மாலை, 6 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது.
* காவேரிப்பட்டணம் மெயின்ரோடு ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில், சங்கடஹரசதுர்த்தி வழிபாடு இன்று நடக்கிறது. இதையொட்டி, மாலை, 6 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.
* காவேரிப்பட்டணம் அடுத்த பெண்ணேஸ்வரர் மடம் ஸ்ரீ வேதநாயகி சமேத பெண்ணேஸ்வரர் கோவிலில் உள்ள சங்கடஹர கணபதிக்கு, இரவு, 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் குருக்கள் மோகன்குமார் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.
* தர்மபுரி நெசவாளர் காலனி ஸ்ரீ விநாயகர், வேல்முருகன் கோவிலில், மாலை, 6 மணிக்கு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் குருக்கள் சிவானந்தம் மற்றும் செங்குந்த மரபினர் செய்துள்ளனர்.
* தர்மபுரி எஸ்.வி., ரோடு சாலை விநாயகர் கோவிலில், விநாயகருக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்படுகிறது. ஏற்பாடுகளை, பூசாரி சிவசுப்ரமணியம் செய்து வருகிறார்.