திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அடுத்த டி.கொளத்தூர் கிராமத்தில் மீனாட்சி சமேத தடாகபுரீஸ்வரர் மற்றும் லட்சுமி நாராயணபெருமாள் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 16ம் தேதி மாலை 6:00 மணிக்கு வாஸ்துபூஜை யுடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. 17ம் தேதி காலை 6:30 மணிக்கு கோபூஜை மற்றும் கணபதி, நவகிரக ஹோமங்கள் நடந்தன. நேற்று காலை 6:00 மணிக்கு நான்காம்கால பூஜையும், ஹோமங்களும், காலை 9:00 மணிக்கு மகாபூர்ணாஹூதியும் நடந்தன. காலை 9:35 மணிக்கு கலசங்கள் புறப்பாடாகி 9:45 மணிக்கு மீனாட்சி, தடாகபுரீஸ்வரர் மற்றும் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் விமானங்களுக்கு கும்பாபிஷேகம், 10:00 மணிக்கு மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேங்களும், தீபாராதனைகளும் நடந்தன. சர்வசாதகத்தை சுந்தர்ராமன் சாஸ்திரிகள் நடத்தினார். ஏற்பாடுகளை மீனாட்சி சமேத தடாகபுரீஸ்வர லட்சுமி நாராயண சத்சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.