அரியலூர்: ரெட்டிபாளையம் அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீபாலாஜி கோவில் கும்பாபிஷேக விழா வரும் 26ம் தேதி நடக்கிறது. அரியலூர் அருகே ரெட்டிபாளையம் அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீபாலாஜி கோவிலில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஸ்ரீநிவாசர், சக்ரத்தாழ்வார் மற்றும் ஸ்ரீசீதா, லெக்ஷ்மண, அனுமந்த் சமேத ஸ்ரீராமபிரான் கோவில்களுக்கு, ஜீர்ணோத்தாரன அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேம், வரும் 26ம் தேதி புதன் கிழமை காலை 10.45 மணி முதல் 11.15 மணி வரை நடக்கிறது. அதன் யாகசாலை பூஜைகள் 24ம் தேதி திங்கள் மாலை 6 மணிக்கு துவங்குகிறது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆலை நிர்வாக தலைவர் கணேசன் மற்றும் ஆலய கமிட்டியினர் செய்து வருகின்றனர்.