பதிவு செய்த நாள்
26
மார்
2014
12:03
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் இக்கோவிலில்,
பங்குனி மாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. கோவில் பரம்பரை
தர்மகர்த்தா ரவி குருக்கள் தலைமையில், அர்ச்சகர்கள் கொடியேற்றி வைத்தனர்.
பின்னர், மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடந்தன. இரவு,
சிம்ம வாகனத்தில், உற்சவர் தீர்த்தீஸ்வரர், அம்பாளுடன் எழுந்தருளினார்.
வரும், ஏப்., 4ம் தேதி வரை, மொத்தம், 12 நாட்கள் நடைபெறும் விழாவில்,
தினமும், அம்பாள் சமேதராக, உற்சவர் பல்வேறு வாகனங்களில், எழுந்தருளி,
பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.