காத்மாண்டு: நேபாளில் இந்து கோயில் திருவிழாவில் சிறுமியை வாழும் தெய்மாக வழிபடும் மரபினை அந்நாட்டு இந்துக்கள் கடைபிடித்து வருகின்றனர். நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள ஒரு இந்து கோயிலில் கோடே ஜாத்ரா என்ற பண்டிகை ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று நடந்த இக்கோயில் திருவிழாவின் போது , சிறுமி ஒருவரை கடவுளாக பாவித்து அச்சிறுமியை அம்மன் வேடமாக அலங்கரித்து பல்லக்கில் தூக்கி வந்து கோயிலை வலம் வருகின்றனர். அப்போது கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிறுமியை வாழும் தெய்வமாக வழிபடுகின்றனர்.