ஓம் சிவ தொண்டு மன்றத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மார் 2014 11:03
புதுச்சேரி: பருவதமலையில் அன்னதானம் செய்வதற்காக ஓம் சிவ தொண்டு அன்னதானம் மன்றத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடந்தது. புதுச்சேரி ஓம் சிவ தொண்டு அன்னதான மன்றம் சார்பில், பருவதமலையில் பவுர்ணமி தினத்தன்று அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் 14ம் தேதி சித்திரை பவுர்ணமி தினத்தன்றும் பருவத மலையில் அன்னதானம் செய்யப்பட உள்ளது. மன்றத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம், பாக்கமுடையான்பட்டு பார்வதி திருமண நிலையத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில், மன்றத் தலைவர் ஆறுமுகம், செயலாளர் ரவி, பொருளாளர் குமாரசாமி மற்றும் செயலவை உறுப்பினர்கள் கணேச மூர்த்தி, பரமசிவம், பிச்சாண்டி, ஏழுமலை, விஜயகுமார், ராமர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் பாமனும் பார்த்தனும் என்னும் தலைப்பில் புலவர் ராமசாமி சிறப்புரையாற்றினார். அன்னதானம் வழங்கப்பட்டது. முகாமில் 200 பேர் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்.