சோழவந்தான் ஜெனகநாராயணப்பெருமாள் கோயிலில் கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2014 11:04
சோழவந்தான் : சோழவந்தான் ஜெனகநாராயணப்பெருமாள் கோயிலில், பிரமோத்ஸவ பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 11 நாட்கள் நடக்கும் கோயில் திருவிழா நேற்று காலை 9 மணிக்கு பூதேவி, ஸ்ரீதேவியர் பெருமாள் சுவாமிக்கு பல்வேறு அபிஷேக, யாகசாலை பூஜை நடந்தது. கொடியை ரகுராமர் பட்டர் சுமந்து ரதவீதி சுற்றி பக்தர்களுடன் வலம் வந்தனர். பின், கொடியேற்றம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.ஏப்.,6 காலை 10 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. அன்றிரவு 7 மணிக்கு தேவியருடன் சுவாமி வண்ண ரதத்தில் ரத வீதியில் எழுந்தருளுல், ஏப்.,9 ல் புஷ்பயாகம் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் மாலதி, நிர்வாக அதிகாரி ராஜேந்திரகுமார், ஊழியர் பூபதி செய்துள்ளனர்.