பதிவு செய்த நாள்
02
ஏப்
2014
09:04
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருக்கல்யாண விழா,நாளை(ஏப்.,3) துவங்குகிறது. இதையொட்டி, காலை 8 மணிக்கு, தேங்காய் தொட்டு நியமனம் பெறுதலும், மறுநாள் சேனை முதல்வர் புறப்பாடு நடக்கிறது. ஏப்.,5ம் தேதி காலை 10.30 மணிக்கு, கொடியேற்றம் நடக்கிறது. கருடாழ்வார் முத்திரை பதித்த கொடி, நான்கு ரதவீதிகளும் சுற்றி வரப்பட்டு, கொடிமரத்தில் ஏற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடக்கிறது. விழா நாட்களில், சந்திரபிரபை, சிம்மம், தங்க பரங்கி நாற்காலி, அனுமார், சேஷ, கோவர்த்த, கருடாழ்வார், இரட்டை பரங்கி நாற்காலி, தந்தப் பல்லக்கு போன்றவைகளில் வீதி உலா நடக்கிறது. விழாவின் முக்கியநாளான பங்குனி உத்திரமான ஏப்.,13 தேதி காலையில், ஆண்டாள், ரெங்கமன்னாரில் தேரில் எழுந்தருளுதல்,தொடர்ந்து தேரோட்டம் நடக்கிறது. கோட்டை தலைவாசல் ரேணுகா தேவி கோயிலில், திருக்கல்யாண பட்டு புடவை, வேட்டி, திருமாங்கல்யம் பெறுதல் நடக்கிறது. இரவு 7 மணிக்கு ஆடிப்பூர மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. 17ம் தேதி குறடில் புஷ்பயாகம் நடக்கிறது. ஏற்பாடுகளை, தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் ராமராஜா, கோயில் ஊழியர்கள் செய்கின்றனர்.