தீப்பாஞ்சாள் அம்மன் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஏப் 2014 09:04
திருவெண்ணெய்நல்லூர்; திருவெண்ணெய்நல்லூர் தீப்பாஞ்சாள் அம்மன் கோவிலில் நேற்று மண்டலாபிஷேக நிறைவு பூஜையும், 108 பால்குட ஊர்வலமும் நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் கள்ளுக்கடைமூலை அருகில் பழமையான தீப்பாஞ்சாள் கோவில் கடந்த 12.02.2014ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று 48ம்நாள் மண்டலாபிஷேக நிறைவு பூஜையும், 108 பால்குட ஊர்வலமும் நடந்தது. காலை 9:00 மணிக்கு முத்துமாரியம்மன் கோவிலிருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டு, முக்கிய வீதிகளின் வழியே தீப்பாஞ்சாள் கோவிலை அடைந்தது. காலை 10:30 மணிக்கு அம்மனுக்கு பாலாபிஷேகமும், மதியம் 12:00 மணிக்கு ஊஞ்சல் சேவையும் நடந்தது.மதியம் 1:00 மணிக்கு புதியதாக செய்யப்பட்ட ராமரின் வெண்கல சிலை கரிக்கோலம் விடப்பட்டது. மாலை 4:00 மணிக்கு மண்டலாபிஷேக நிறைவு பூஜையும், மாலை 6:00 மணிக்கு அம்மன் திருவீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை அருளாளர் சுந்தரர் அருட்சபையினர், விழாக் குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.