நாகர்கோவில் : பறக்கை , மதுசூதன பெருமாள் கோயில் பங்குனித் திருவிழா ஏப்.4 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.அன்று காலை கணபதி ஹோமமும், கொடியேற்றமும் நடைபெறுகின்றன. இரவு சுவாமி பூப்பந்தல் வாகனத்தில் பவனி வருதல் நடைபெறுகிறது.9-ம் திருநாளான ஏப். 12-ம் தேதி காலை 9 தேர்த் திருவிழாவும், பகல் அன்னதானமும், இரவு சப்தாவர்ணமும் நடைபெறுகின்றன. 10- ம் திருவிழா அன்று இரவு தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.