Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி பங்குனி உத்திரவிழா: பணிகள் ... தீர்த்தீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்! தீர்த்தீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீ ராமநவமியையொட்டி பந்தக்கால் நடும் விழா
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 ஏப்
2014
10:04

பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை அருகே ஸ்ரீ ராம அனுமன் கோவிலில் ஸ்ரீ ராமநவமி பிரம்மோற்சவத்தையொட்டி நேற்று பந்தக்கால் நடும் விழா நடந்தது. பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூர் எம்.ஜி.ஆர்., சிலை அருகே 127 அடி உயர ஸ்ரீ ராம அனுமன் கோவில் கட்டப்பட்டு வருகிறது. அங்கு ஸ்ரீ ராமநவமி பிரம்மோற்சவ விழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இந்தாண்டு வரும் 8ம் தேதி துவங்கி 18ம் தேதி வரை நடக்கிறது. அதையொட்டி நேற்று பந்தக்கால் நடும் விழா நடந்தது. தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை, ஆராதனை நடக்கிறது. இரவு பரதநாட்டியம், இசை சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சியும், 13ம் தேதியில் இருந்து 17ம் தேதி வரை சம்பூர்ண ராமாயணம் நாடகம் நடக்கிறது. 18ம் தேதி அதிகாலை சீத்தாராமர் பட்டாபிஷேகம் நடக்கிறது. விவசாய சங்கத் தலைவர் விஜயகுமார், உத்திராபதி, தேசிங்கு, புஷ்பராஜ், சுகுமார், செந்தமிழ்ச்செல்வி உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ராமஅனுமான் தர்ம பரிபாலன அறக்கட்டளைத் தலைமை அறங்காவலர் சீனு என்கிற ராமதாஸ் செய்து வருகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar