இங்கு காரடையான் நோன்பினை வடசாவித்ரி விரதம் என்ற பெயரில் வடநாட்டுப் பெண்கள் கடைப்பிடிக்கின்றனர். அன்றைய தினம் அரச மரத்தினை சுற்றி வந்து நூல் சுற்றி வணங்குகின்றனர். காட்டில் மரம்வெட்டும்போது சத்தியவானின் உயிர் காப்பாற்றப்பட்டதால் அந்த மரத்தையே புனிதமாகக்கருதி வழிபடுகிறார்கள்.