அரியலூர் மீனாட்சி கோயிலில் 13-ம் தேதி மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2014 11:04
அரியலூர்: அரியலூர் மீனாட்சியம்மன், சொக்கநாதர் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 13-ம் தேதி நடக்கிறது. அரியலூர் மாவட்டம் கோடாலிகருப்பூர், உடையார் பாளையத்தில் உள்ள மீனாட்சி அம்மன், சொக்கநாதர் சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் 13-ம் தேதி காலை 9 .00 மணி முதல் 11.00 மணிக்குள் நடக்கிறது. முன்னதாக இக்கோயிலில் திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் மகா கும்பாபிஷேக யாகசாலை நிகழ்ச்சிகள் நிரல்படி நடத்திட கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.