பதிவு செய்த நாள்
04
ஏப்
2014
12:04
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகம் கூத்தாண்டவர் கோவில் மகா கும்பாபிஷேம் வரும் 27ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வரும் 25ம் தேதி காலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமம், மாலை 5 மணிக்கு அனுக்ஞை, ஆசார்யவர்னம், அங்குரார்பணம், வாஸ் துசாந்தி, அக்னி பிரதிஷ்டி கலச ஸ்தாபனம், மகா பூர்ணாஹூதி நடக்கிறது. 26ம் தேதி காலை 7 மணிக்கு புண்யாக வாகனம், யாக பூஜை, ஹோமம், மாலை 5 மணிக்கு பிம்பசுத்தி, யாகசாலை ஹோமம், மகாபூர்ணாஹூதி, வேத பிரபந்த சாற்று முறை நடக்கிறது. 27ம் தேதி காலை 6 மணிக்கு விஸ்வரூபம், சுப்ரபாதம், ஆராதனை, ஹோமம், காலை 9 மணிக்கு மகா பூர்ணாஹூதி, காலை 9.45 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு நடக்கிறது. காலை 10 மணி முதல் 11.30 மணிக்குள் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேம் நடக்கிறது. பின், தொடர்ந்து ஆராதனம், ஆசீர்வாதம், பிரம்ம கோஷம், பாகவத சாரம் சாற்று முறை, கோஷ்டி தீர்த்தம், பிரசாத விநியோகம் நடக்கிறது.