கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் நாளை பங்குனித் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2014 12:04
கோவில்பட்டி :கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா நாளை (ஏப்.5-ம் )கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்படும். தொடர்ந்து, சுவாமி, அம்பாள், பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெறும். காலை 10.30 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெறுகிறது. தினமும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா , தேரோட்டம் , தீர்த்தவாரி நிகழ்ச்சியும், 11ம் திருநாளான செவ்வாய்க்கிழமை(ஏப்.15) தெப்பத் திருவிழாவும் நடைபெறும்.