உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை வட்டம், கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் 27ம் தேதி நடக்கிறது. இதையொட்டி 25- ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமம், மாலை 5 மணிக்கு அக்னி பிரதிஷ்டை, கலச ஸ்தாபம், மகாபூர்ணாஹூதி, யாகசாலா ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜையும், 26ஆம் தேதி மாலை 5 மணிக்கு வேத கோஷ மகாசாந்தி, யாகசாலா ஹோமம், வேத பிரபந்த சாற்றுமுறை உள்ளிட்ட சிறப்பு பூஜை மற்றும் யாகங்களும் நடைபெறுகின்றன. 27ஆம் தேதி காலை 10 மணிக்கு மஹாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது.