மானாமதுரை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அண்ணா சிலை அருகேயுள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் நேற்று வருஷாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி சன்னதி மண்டபத்தில் 108 சங்குகளில் நீர் நிரப்பி வைத்து வேத விற்பன்னர்கள் யாகம் வளர்த்து சங்காபிஷேகம் நடத்தினர். யாகம் நிறைவடைந்து பூர்ணாஹூதி நடைபெற்று தர்மசாஸ்தா ஐயப்பனுக்கு புனிதநீராடலும் பலவகைப் பொருள்களாலும் அபிஷேகம் நடத்தி மலர் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.