கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் ஆறாட்டு விழா துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2014 10:04
கோவை: கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் ஆறாட்டு விழா நேற்று துவங்கியது. கோவை, சித்தாபுதூரில் ஐயப்பசுவாமி பொற்கோவில் உள்ளது. இக்கோயிலின் 45-வது ஆண்டு உற்சவ ஆறாட்டு விழா இன்று மாலை துவங்குகிறது. இதையொட்டி கோயில் கொடிமரத்திற்கு பூஜை, தீபாராதனை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. எட்டு நாட்கள் நடக்கும் இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆறாட்டுவிழா நடக்கிறது. நேற்று பூதன்தாரா நடன கலைஞர்கள் நடனமாடி ஊர்வலம் வந்தனர். தொடர்ந்து நடக்கும் விழாவில் ஐந்து யானைகள் அணிவகுத்து வர ஐயப்பன் திருவீதியுலா நடக்கிறது.