அரியலூர் கலியுக வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்: 16ல் உள்ளூர் விடுமுறை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஏப் 2014 12:04
அரியலூர்: கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்தில், வரும் 16ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதுபற்றி அரியலூர் மாவட்ட கலெக்டர் சரவண வேல்ராஜ் வெளியிட்ட அறிக்கை: அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயில் தேர்த்திருவிழா, வரும் 16ம் தேதி புதன்கிழமை நடக்கிறது. எனவே 2014ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதியன்று, அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கல்வி நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும். இருப்பினும் தமிழ்நாடு அரசு பள்ளி தேர்வுத்துறை சார்பில் நடத்தப்படும் பள்ளி இறுதி வகுப்பு அரசு தேர்வுகளுக்கு (மெட்ரிக், ஆங்கிலோ இண்டியன் பள்ளி தேர்வுகள்) உள்ளிட்ட தேர்வுகளுக்கு இவ்வறிப்பு பொருந்தாது. அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நாளில் அத்தேர்வுகள் நடத்தப்படும். ஏப்ரல் 16ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதால், அதை ஈடு செய்யும் பொருட்டு, மே மாதம் 3ம் தேதி சனிக்கிழமை வேலை நாள் எனவும் ஆணையிடப்படுகிறது. மேற்கண்ட விடுமுறை நாளில் அனைத்து துணை கருவூலங்களும், குறைந்த பணியாளர்களை கொண்டு செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.