பதிவு செய்த நாள்
07
ஏப்
2014
12:04
உளுந்தூர்பேட்டை: கீழப்பாளையம் கிராமத்தில் உள்ள பாவாடைராயன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. எலவனாசூர்கோட்டை கீழப்பாளையத்தில் உள்ள ஸ்ரீமகா கணபதி, பெரியநாயகி அம்மன், கருப்பண்ண சுவாமி மற்றும் பாவாடைராயன் கோவில் மகா கும்பா பிஷேகம் நேற்று நடந்தது. அதனையொட்டி நேற்று முன்தினம் காலை 7.30 மணிக்கு கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜையும், மாலை 6 மணிக்கு கலச ஸ்தாபனம், அங்குரார்பணம், முதல் கால யாக சாலை பூஜை, மகா பூர்ணாஹூதி நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு கோ பூஜை, இரண்டாம் கால யாக சாலை பூஜை, ஹோமம், பூர்ணாஹூதியை தொடர்ந் கலசம் புறப்பாடாகி, காலை 8:45 மணிக்கு கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.