சின்னமனூர் : சின்னமனூரில், மதுரை இஸ்கான் சார்பில், ஹரி நாம பஜனை, பகவத் கீதை சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. மதுரை இஸ்கான் துணைத் தலைவர் முரளி ஷ்யாம்தாஸ் சொற்பொழிவு நிகழ்த்தினார். அவர் கூறுகையில், "ஒவ்வொருவரும் உலக கடமைகளில் ஈடுபட்டுள்ளோம். அந்த உலக கடமைகளை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எப்படி செய்ய வேண்டும், என பகவத் கீதையில் கூறியுள்ளார். அதாவது ஒருவர் எல்லா விதமான உலக கடமைகளில் ஈடுபட்டிருந்தாலும், நாம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நினைத்துக் கொண்டு செய்தால், நம் வாழ்க்கை பயனுள்ளதாக அமையும். இந்த கலியுகத்தில் பகவானை நினைப்பதற்கு, அவருடைய "ஹரே கிருஷ்ண"மந்திரத்தை சொல்வதுதான் ஒரே வழி என்றார். சொற்பொழிவை தொடர்ந்து தீபாராதனை, பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனனர். ஏற்பாடுகளை சின்னமனூர் இஸ்கான் ஆயுள் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.