பெரம்பலூர் பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஏப் 2014 12:04
பெரம்பலூர் ; பெரம்பலூர் பாலமுருகன் கோயிலில் 34-வது ஆண்டு பங்குனி உத்திர பெருந்திருவிழா துவங்கியது. விழாவையொட்டி அன்று மாலை 6 மணிக்கு அனுக்கை, ஸ்ரீவிக்னேஸ்வரர் பூஜை, வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம் உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இன்று ) முதல் 13-ம் தேதி வரை நாள்தோறும் காலை சிறப்பு அபிஷேகமும், திருவீதி உலாவும் நடைபெறுகின்றன.13-ம் தேதி காலை பாலமுருகன், வள்ளி- தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அப்போது பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. 14-ம் தேதி காலை மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவடைகிறது. 2