பதிவு செய்த நாள்
09
ஏப்
2014
10:04
திருப்புத்தூர் : திருப்புத்தூர் அருகே பொன்னமராவதி கொன்னையூர் முத்து மாரியம்மன் கோயிலில்,பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனுக்காக உடலில் சகதியைப் பூசிக்கொண்டனர். கொன்னையூர் முத்து மாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா, மார்ச் 16ல், பூச்சொரிதலுடன் துவங்கியது. தொடர்ந்து அக்னிப்பால் குடம், தீமிதி நிகழ்ச்சிகள் நடந்தன. காப்புக் கட்டி, மண்டகப்படி நிகழ்ச்சி துவங்கின. ஏப்.7ல் பங்குனிப் பெருவிழா நடந்தது. பொன்னமராவதி, செவலூர், ஆலவயலைச் சேர்ந்தோர் பங்கு பெறும் "நாடு செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.இந்த பகுதியைச் சேர்ந்த பக்தர்கள், கம்பு, ஈட்டிகளுடன் வந்தனர்.ஆலவயல் பக்தர்கள், உடலில் சகதியைப் பூசிக் கொண்டு அம்மனை வழிபட்டனர்.