ராசிபுரம் : நாமக்கல் மாவட்டம் ராசி புரம் அருகே சீராப்பள்ளி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் திருவிழா நடந்து வருகிறது. இந்த ஆண்டும் வழக்கம்போல் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து கம்பம் நடும் நிகழச்சி நடைபெற்றது. இன்று அதிகாலை பெண்கள் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், மாலையில் தீமிதி விழாவும் நடக்கிறது. விழாவையொட்டி மாரியம்மனுக்கு தினந்தோறும் அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேகம், ஆராதனை நடத் தப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்தனர்.