சுப்ரமணிய சுவாமி கோவிலில் 13ம் தேதி பங்குனி உத்திர திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2014 12:04
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை சுப்ரமணிய சுவாமி கோவிலில் வரும் 13ம் தேதி பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. அதனையொட்டி அன்று காலை 8 மணிக்கு காவடி ஸ்தாபன பூஜை, 1008 காவடி தேர், செடல், பால் குடம் ஆகியவை வேடுசெட்டி குளக்கரையில் இருந்து புறப்பட்டு தேரோடும் வீதியாக சுப்ரமணிய சுவாமி கோவிலை வந்தடைகிறது. 11.30 மணிக்கு சுவாமிக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடக்கிறது. இரவு 8 மணிக்கு சுப்ரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் வீதியுலா நடக்கிறது. 25ம் தேதி இடும்பன் பூஜை நடக்கிறது.