பதிவு செய்த நாள்
11
ஏப்
2014
12:04
அவிநாசி: அவிநாசி அருகே ராயன் கோவில் காலனியில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில், ஸ்ரீராம நவமி மகோற்சவ விழா, கடந்த 8ம் தேதி விநாயகர் பூஜை, ஸ்ரீராமதாரக மந்திர ஹோமம், யாக பூஜைகளுடன் துவங்கியது. மதியம், பூர்ணாஹூதி, தீபாராதனை, சிறப்பு ஆரத்தி பூஜை ஆகியன நடந்தது. இரண்டாம் நாளில், சுதர்ஷன ஹோமம், மஹா பூர்ணாஹூதி ஆகியன நடந்தன. நிறைவு நாளான நேற்று, தட்சிணாமூர்த்தி, தத்தாத்ரேயர், சாய்பாபா மூல மந்திர பாராயணம், சிறப்பு அபிஷேகம், ஆரத்தி ஆகியன நடந்தன. கோவை நாகசாயி பஜன் மண்டலி, சாய் சண்முக சுந்தரம் குழுவினர் ஆகியோரது இசை நிகழ்ச்சிகள் நடந்தன.