பதிவு செய்த நாள்
11
ஏப்
2014
02:04
கம்மாபுரம்: கம்மாபுரம் அடுத்த விளக்கப்பாடி செல்லியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.இதை முன்னிட்டு கடந்த 8-ம் தேதி மாலை 8:00 மணியளவில் கணபதி, நவக்கிரக ஹோமம், அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜை, வாஸ்து சாந்தி, தீபாராதனை நடந்தது.
÷ந்று முன்தினம் (9-ம் தேதி) காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை ஆரம்பம், திரவிய ஹோமம், காலை 9:30 மணிக்கு கடம் புறப்பாடு, காலை 10:00 மணியளவில் அய்யனார், செல்லியம்மன் கோவில் விமானங்களில் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து காலை 10:45 மணிக்கு அய்யனார், செல்லியம்மன் மூலவர் சுவாமிகள், பரிவர்த்த சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் , மகா தீபாராதனை நடந்தது.