நாகப்பட்டினம், : நாகையை அடுத்த நாகூரில் தர்கா உள்ளது. மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக விளங்கும் இந்த நாகூர் தர்காவில் நாகூர் ஆண்டவர் நினைவு நாள் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 457-வது கந்தூரி விழா கடந்த 1--ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தன கூடு ஊர்வலம் நேற்று இரவு நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.