பதிவு செய்த நாள்
12
ஏப்
2014
12:04
பெரியகுளம்: பாலசுப்பிரமணியர் கோயில், பங்குனி உத்திரத்திருவிழாவில், இன்று தேரோட்டம் நடக்கிறது. பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில், பங்குனி உத்திரத்திருவிழா ஏப்.,4ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தென்மாவட்டங்களில் பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் தேரோட்டம் மிகவும் பிரசித்திப்பெற்றதாகும். தேர் திருவிழாவை காண்பதற்கு வெளியூர்களில் வசிப்பவர்கள் குடும்பத்துடன் வந்துள்ளனர். திருவிழாவை முன்னிட்டு, முருகன் வள்ளி, தெய்வானை, சிவன், அறம்வளர்த்த நாயகி, நந்தி உட்பட தெய்வங்களுக்கு, அபிஷேகம் செய்யப்பட்டு, உற்சவர்கள் வீதி உலா நடந்து வருகிறது. 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில், முக்கிய திருவிழாவான, இன்று ( ஏப்.12ல்)தேரோட்டம் நடக்கிறது. பக்தர்கள், தேர் வரும் பகுதியில், நிழற்பந்தல் அமைத்துள்ளனர். இலவசமாக மோர் மற்றும் குடிநீர் விநியோகம் செய்கின்றனர். ஏற்பாடுகளை செயல்அலுவலர் சுதா தலைமையில், மண்டகபடிதாரர்கள், திருப்பணிக்குழுவினர் செய்து வருகின்றனர்.