கேரளா கும்பமேளா: திருநாவாய பாரதப்புழை நதியில் சுப்ரமணிய பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜன 2026 10:01
பாலக்காடு: திருநாவாய பாரதப்புழை நதியில் நடைபெறும், கேரளா கும்பமேளாவில் இன்று சுப்ரமணிய பூஜை நடக்கிறது.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே பாரதப்புழை (நிளா) நதியில், கங்கையின் புண்ணியத்தைத் தேடி, கும்பமேளாவிற்கு வந்த பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். பிப். 3ம் தேதி கும்பமேளா நிறைவடையும் வரை, தினமும் காலையில் நிளா நதியில் புனித நீராடலாம்.
இந்நிலையில், மகாமகம் மஹோற்சவத்தின் ஒரு பகுதியாக பஞ்சமி நாளான நேற்று சதுராம்பிகா பூஜை நடைபெற்றது. பாரதப்புழா ஆற்றைப் பாதுகாப்பதற்காக பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட திக் பாலக தேவதைகளான சதுராம்பிகா தேவியர்களை வழிபடுவதே இந்தப் பூஜையின் சிறப்பாகும். ஆச்சார்யார் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இன்று, யாகசாலையில் சுப்ரமணிய பூஜை நடக்கிறது. அதிகாலையில் தொடங்கும் இந்தப் பூஜை சுப்ரமணியப் பெருமானின் அருளைப் பெறுவதற்காக நடத்தப்படுகிறது. ஆச்சார்யார் உமேஷ் தலைமையில் பாலசுப்பிரமணியன், தண்டாயுதபாணி, சுப்ரமணியன் என மூன்று நிலைகளாக இந்தப் பூஜை நடைபெறும். மாலையில் யாகசாலையில் யக் ஷி பூஜை நடைபெறும். ரத சப்தமி நாளான நாளை (25ம் தேதி) புனித நெருப்பின் வடிவமான பிரத்யங்கிரா தேவியை போற்றும், பிரத்யங்கிரா பூஜை நடைபெறும். காலையில் அட்சர பிரத்யங்கிராவுக்கும், மாலையில் உக்ர பிரத்யங்கிராவுக்கும் பூஜைகள் நடைபெறும். ஆச்சார்யார் சதீஷ்பாபு தலைமையில் இந்தப் பூஜைகள் நடைபெறும்.திருநாவாய் மகாமகம் மஹோற்சவத்தில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. கேரளாவின் பல்வேறுமாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநி லங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள்திருநாவாய்க்கு வந்த வண்ணம் உள்ளனர். அதிகாலை முதலே கடும் கூட்டம் நிலவுகிறது.