புதுச்சத்திரம் பாலசுப்ரமணியர் கோவில் பங்குனி உத்திர திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2014 02:04
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த நைனார்குப்பம் பாலசுப்ரமணியர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நாளை (13ம் தேதி) நடக்கிறது.விழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் ”வாமிக்கு அபிஷேக ஆராதனை நடக்கிறது. இன்று பாலசுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகமும், சுவாமி வீதியுலாவும் நடக்கிறது.நாளை (13ம் @ததி) காலை 10:00 மணிக்கு காவடி, தேர் மற்றும் செடல் உற்சவம் நடக்கிறது. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்கின்றனர்.