பதிவு செய்த நாள்
12
ஏப்
2014
03:04
திருப்பூர் : திருப்பூர் திருக்கோவில் பக்தர் பேரவை சார்பில், அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா, 14ல் நடக்கிறது.அன்று காலை 6.00 மணிக்கு பால்குடம், காவடி ஊர்வலம், கிரிவலம் நிகழ்ச்சிகளுடன் துவங்கும் அவ்விழாவில், காலை 7.00 மணிக்கு சித்திரை கனி பூஜை, அபிஷேக ஆராதனை, நீர்மோர் வழங்கல், பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். காலை முதல் மாலை வரை, தொடர்ந்து பாரத மாதா பூஜை, பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. விழாவை முன்னிட்டு, திருப்பூர் விஸ்வேஸ்வர், ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில்களில் உழவாரப்பணிகள் மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளனர்.