கடலூர்: கடலூர் மஞ்சக்குப்பம்
தென் பெண்ணையாற்றங்கரையில் உள்ள நீர்ஓடை ஐயனாரப்பனுக்கு கிடா வெட்டி பூஜை
நடந்தது.கடலூர் மஞ்சக்குப்பம் தென்பெண்ணை நதிக் கரையில் உள்ள நீர் ஓடை
ஐயனாரப்பனுக்கு ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டில் கிடா வெட்டி பூஜை
நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு @நற்று முன்தினம் (13ம் தேதி) காலை 9:00
மணிக்கு அங்காளம்மன் கோவிலில் இருந்து எல்லை கட்டி ஊர்வலம் நடந்தது. @நற்று
14ம் தேதி காலை சுவாமிக்கு அபிஷேக ஆராதனையும், சந்தனக்காப்பும் நடந்தது.
பின்னர் கிடா வெட்டி சிறப்பு பூஜை நடந்தது. மதியம் பிரியாணி தயார் செய்து
பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.