பதிவு செய்த நாள்
15
ஏப்
2014
01:04
திருப்பரங்குன்றம் : தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறமுள்ள கோயில் நிலத்தில் நான்கு ஏர் பூட்டி உழும் நிகழ்ச்சி நடந்தது.சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவருக்கு தங்க கவசம், கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாளுக்கு வெள்ளி கவசம் சாத்துப்படியாகி அருள்பாலித்தனர். சிறப்பு பூஜைகள் முடிந்து அன்னதானம், இரவு தங்க ரத உலா, திருவிளக்கு பூஜை, சொற்பொழிவு நடந்தது.விவசாயிகள் நேற்று காலை நான்கு ஏர்களில் மாடுகள் பூட்டி தென்பரங்குன்றத்திலுள்ள கோயில் நிலங்களை உழுதனர். கல்வெட்டு குகை கோயில் முன்பு கிராமத்தினர், ஏழு குளம் பாசன விவசாயிகள் கூட்டம் நடத்தி, திருவிழா கொண்டாட்டம், விவசாயம் குறித்தும், தொழில்களுக்கான கூலி நிர்யணம் செய்து ஆலோசித்தனர். இரவு கோயிலில் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.