காரியாபட்டி : மல்லாங்கிணரில், செங்கமலநாச்சியார் சமேத சென்னகேசவபெருமாள் கோயில், 10 நாள் பங்குனி விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வந்தது. முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று முன் தினம், தேரோட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவர் நாகையா வடம் பிடித்து துவக்கி வைத்தார். நான்கு ரத வீதிகள் வழியாக, தேர் வலம் வந்து, நிலையை அடைந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.