கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2014 03:04
கோவில்பட்டி : கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் திருவிழாவையொட்டி நேற்று தீர்த்தவாரி நடைபெற்றது. இக்கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10ஆம் திருநாளான நேற்று தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது கோயில் நடை நள்ளிரவு திறக்கப்பட்டது. பின்னர் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர். மாலை 6 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் திருவீதியுலா வந்தனர். இன்று 11-ம் திருநாளையொட்டி இரவு 7 மணிக்கு மேல் திருக்குளத்தில் பவனி வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.