பதிவு செய்த நாள்
18
ஏப்
2014
11:04
பவானி: பவானி, தேவபுரம், டெலிஃபோன் ஆஃபீஸ் ரோட்டில் உள்ள ஸ்ரீகருமாரியம்மன் கோவிலில், சித்திரை திருவிழா நடந்து வருகிறது. கடந்த, 14ம் தேதி பவானி, கூடுதுறையில் இருந்து தீர்த்த கூடம் எடுத்து வந்து, கருமாரியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடத்தப்பட்டது. 15ம் தேதி பொங்கல் விழா, மாவிளக்கு, முளைப்பாரி, அக்னி சட்டி, அலகு குத்தி ஊர்வலம் நடந்தது. 16ம் தேதி, பொதுமக்கள் நலன் வேண்டியும், நல்ல மழை வேண்டியும், கருமாரியம்மன் நற்பணி மன்றத்தார் சார்பில், 108 திருவிளக்கு பூஜை நடந்தது. பவானி சங்கமேஸ்வரர் கோவில் குருக்கள் பாலாஜிசிவம் நடத்தி வைத்தார். நேற்று முன்தினம், காலை, பத்து மணிக்கு கொடிக்கம்பம், காவிரி ஆற்றில் விடப்பட்டது. மாலை, ஆறு மணிக்கு மஞ்சள் நீராட்டு நடந்தது. ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா மாதுசாமி, துணை செயலாளர் கண்ணன், பொருளாளர் சரவணன் ஆகியோர் செய்தனர். தொழிலாளி தற்கொலை ஈரோடு: அரச்சலூர் அடுத்த துய்யம்பூந்துறை டி.மேட்டுப்பாளையம், நல்லாந்தொழுவு காலனியை சேர்ந்தவர் தங்கராசு, 40. தொழிலாளி. இவர் மனைவி பூவாத்தாள்,32. இவர்களுக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டது. மனமுடைந்த தங்கராசு, அரளி விதையை அரைத்து குடித்தார். ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இறந்தார்.