Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோட்டை மாரியம்மன் கோவில் ... மகிமாலீஸ்வரர் கோவில் திருத்தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரங்கமலையை சுற்றுலாத்தலமாக்க பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2014
12:04

க.பரமத்தி: "ரங்கமலையில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும், தெய்வீக மணம் கமழும் மூலிகை மலைக்கு, படிக்கட்டுகள் வசதியை ஏற்படுத்தி, சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியிலிருந்து, 14 கி.மீ., தொலைவில் உள்ளது ரங்கமலை. கரூர், திண்டுக்கல் மாவட்டத்தின் எல்லையில் உள்ள மலையின் தென்பகுதி திண்டுக்கல் வனத்துறை மேற்பார்வையிலும், வடபகுதி கரூர் மாவட்ட வனத் துறை பாதுகாப்பிலும் உள்ளது. 1,500 அடி உயரம் கொண்ட மலையை பசுமையான காடு சூழ்ந்துள்ளது. ரங்கமலை மீது உள்ள ஸ்ரீமல்லீஸ்வரன் கோவிலில், மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி, கிருத்திகை நாட்களில் சிறப்பு பூஜை நடக்கிறது. ஆண்டுதோறும் ஆடி, 18ம் தேதி ஆடிப்பெருக்கு விழாவின் போது, ஏராளமான பக்தர்கள் ரங்க மலைக்கு வருகின்றனர். இதனால், 23 லட்சம் ரூபாய் மதிப்பில், மலை அடிவாரம் வரை தார்சாலை அமைக்கப்பட்டது. ஆனால், மலை மீதுள்ள ஸ்ரீ மல்லீஸ்வரன் கோவிலை அடைய கரடு முரடான செங்குத்தான ஆபத்து நிறைந்த வழியாக, பக்தர்கள் சென்று வருகின்றனர். இதனால் பலர் மலை ஏறும் போது தடுக்கி விழுந்து காயமடைகின்றனர். இதனால், மலைக்கோவிலுக்கு செல்ல படிக்கட்டுகள் வசதி செய்து தர வேண்டியது அவசியம். "மலையின் இயற்கை சூழல் பாதிக்காத வகையில் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் ஸ்ரீமல்லீஸ்வரர் கோவிலை அறிவிக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். அதன் மூலம், கரூர் மாவட்டத்தில் உள்ள அய்யர்மலை, புகழிமலை போல, ரங்கமலையும் பெரும் வரவேற்பை பெரும் என்பதில் ஐயமில்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், கார்த்திகை மாதம் திங்கட்கிழமைதோறும் சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில்,  கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
கோவை ; கார்த்திகை முதல் நாளான இன்று சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; காவிரி துலா கட்டத்தில் முடவன் முழுக்கு, மனோன்மணி சமேத சந்திரசேகர சுவாமி எழுந்தருளி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் 9 நாட்கள் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar