சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் கோயம்புத்தூர் தேவார பாடசாலை சார்பில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உ.வெங்கடேச தீட்சிதர் தலைமை வகித்தார். கோவை காமாட்சிபுர ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்.