ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் வஸ்திர மரியாதை ஸ்ரீரங்கம் வருகிறது!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஏப் 2014 12:04
திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை கமிஷனர் கல்யாணி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் சித்திரை மாத தேர் திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். இந்தாண்டு திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன் தினம் நம்பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இன்று நம்பெருமாள் நெல் அளவு கண்டருளுகிறார். வரும் 26ம் தேதி காலை 10 மணிக்கு ஸ்ரீவில்லிப்புத்தார் ஆண்டாள் கோவிலில் இருந்து, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வஸ்திர மரியாதை வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
வஸ்திர மரியாதை: இக்கோயிலின் இணை கமிஷனர், செயல் அலுவலர், அறங்காவலர் குழுத் தலைவர், அறங்காவலர்கள் முன்னிலையில் வழங்கப்படவுள்ளது.தொடர்ந்து ரெங்கவிலாச மண்டபத்தில் வஸ்திரம் மற்றும் மங்கலப் பொருட்களை மக்கள் பார்வைக்கு வைத்து சகல மரியாதையுடன் வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. சித்திரைத் தேரோட்டம் வரும் 27ம் தேதி நடக்கிறது.