சோழவந்தான்: மதுரை சோழவந்தான் முதலியார்கோட்டை கீழத்தெருவை சேர்ந்தவர் சிவக்குமார்.இவரது வீட்டில் சண்முகசுந்தரம் குடியிருக்கிறார். நேற்று வீட்டு கிணறு வற்றி விட்டதால், தூர் வாரும் பணி நடந்தது. அப்போது கிணற்றுக்குள் சாக்குமூடை கண்டெடுக்கப்பட்டது. அதை பிரித்து பார்த்த போது, இரு கோபுர கலசங்கள் இருந்தன. போலீஸ் மற்றும் வருவாய் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அதை கைப்பற்றி, விசாரித்து வருகின்றனர்.