பதிவு செய்த நாள்
28
ஏப்
2014
12:04
ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுாரில்,யாளி வாகனத்தில் ராமானுஜர் எழுந்தருளி வீதி உலா வந்தார்.ஸ்ரீபெரும்புதுாரில், ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவம் விழா, கடந்த 15ம் தேதி முதல் நடந்து வருகிறது.முதல், 10 நாட்கள், ஆதிகேசவப் பெருமாள் பிரம்மோற்சவம் நடந்தது. அதனைத் தொடர்ந்து, கடந்த 25ம் தேதி, ராமானுஜர் உற்சவம் துவங்கியது. ராமானுஜர், அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் மாலை, 7:30 மணிக்கு, ராமானுஜர் யாளி வாகனத்தில் எழுந்தருளினார். மூன்றாம் நாள் உற்சவமான நேற்று காலை, 6:30 மணிக்கு, ராமானுஜர், அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி, கோவிலில் இருந்து புறப்பட்டு, தேரடி, காந்திரோடு, செட்டி தெரு, திருமங்கையாழ்வார் வழியாக வீதி உலா வந்தார்.