குளித்தலை: குளித்தலை அருகே உள்ள ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த அய்யர்மலை கோவில் அமைந்துள்து. காவிரி தென்கரை சிவஸ்தலங்களில் முதன்மையானதும், தேவர்களாலும், முனிவர்களாலும் பூஜிக்க பெற்றதும், திருநாவுக்கரசரால், தேவாரத் திருப்பதிகப் பாடல் பெற்ற ஸ்தலமாகும். இந்த அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா முன்னிட்டு, நேற்று முன்தினம் கோவிலின் முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கோவில் செயல் அலுவலர் கவியரசு தலைமை வகித்தார். தக்கார் ரத்தினவேல்பாண்டியன், கடம்பர் கோவில் செயல் அலுவலர் யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் பஞ்., தலைவர்கள் பிச்சை, மாணிக்கம், இளங்குமரன், ஒன்றிய கவுன்சிலர் பெரியசாமி உட்பட பலர் பங்கேற்றனர். இந்த திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வரும், 11ம் தேதி காலை 6 மணி அளவில் கோலாகலமாக நடக்கிறது.