சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த பின்னலூர் ராமலிங்கேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. சேத்தியாத்தோப்பு அடுத்த பின்னலூரில் உள்ள ராமலிங்கேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ விழாவையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகமும் விசேஷ அர்ச்சனையும் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனையும், பிரசாத விநியோகமும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பூஜைகளை குருமூர்த்தி குருக்கள் செய்தார். சேத்தியாத்தோப்பு சென்னிநத்தத்தில் உள்ள சென்னீஸ்வரர் கோவில் சிவன்கோவில் தெருவில் உள்ள மகாலிங்கேஸ்வரர் கோவில்களில் சனி பிரதோதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.