பதிவு செய்த நாள்
28
ஏப்
2014
12:04
ஈரோடு: சமயபுரம் மாரியம்மன் கோவில், பொங்கல் விழா நாளை துவங்குகிறது. ஈரோடு அடுத்த நல்லியம்பாளையம் பாலக்காட்டு மேட்டில், சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பொங்கல் விழா ஆண்டுதோறும் நடக்கிறது. இந்தாண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு நாளை (29ம் தேதி) இரவு, எட்டு மணிக்கு கோவில் பூச்சாட்டு விழா மற்றும் கம்பம் நடும் விழா நடக்கிறது. வரும், ஆறாம் தேதி இரவு, ஏழு மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும். ஏழாம் தேதி காலை, மாவிளக்கு பூஜையும், மதியம், ஒரு மணிக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. எட்டாம் தேதி காலை, ஆறு மணிக்கு கோவிலில் இருந்து கம்பம் எடுத்து செல்லுதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவும், மதியம், மூன்று மணிக்கு மறு பூஜையும் நடக்கிறது.